×

அரக்கோணம் இரட்டை கொலை சேத்தூரில் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், ஏப். 15: சேத்தூர் பஸ்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.  தொகுதி துணைச் செயலாளர் ஊமைத்துரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் படுகொலை செய்த சாதிவெறி கும்பலை உடனே கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Arakkonam ,Chettur ,
× RELATED அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு;...