தீயணைப்பு படை சார்பில் நீத்தார் நினைவுதினம் அனுசரிப்பு

தேனி, ஏப்.15: தீயணைப்பு படையில் பணியாற்றியபோது, உயிர்நீத்தவர்களுக்கான நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு படைவீரர்களுக்கு ஆண்டுதோறும் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று நீத்தார் நினைவு தினம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் அனுசரிக்கப்பட்டது. தேனியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் வீரமரணம் அடைந்தவர்களின் உருவப்படங்களுக்கு  மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர் கல்யாணகுமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் உதவி மாவட்ட அலுவலர் குமரேசன், தேனி நிலைய அலுவலர் மனோகரன் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

>