பெரியகுளத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியகுளம், ஏப்.15: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளத்தில் பழைய பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக சார்பில் மாநில உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நகர செயலாளர் ராதா, அதிமுக வேட்பாளர் முருகன், அரசு வக்கீல் வெள்ளைச்சாமி  உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபீக் ஆகியோர் மாலை அணிவித்தனர். நகர செயலாளர் ஜோதிமுருகன், ஒன்றிய செயலாளர் ஆண்டி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் அமமுக வேட்பாளர் கதிர்காமு, பெரியவீரன், சந்தானம் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>