வாடிக்கையாளர்கள் அவதி சித்திரை திருநாளை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

தேனி, ஏப்.15: சித்திரைத் திருநாளையொட்டி நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சித்திரைத் திருநாளையொட்டி வீரபாண்டிகவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சிவிநாயகர் கோயில், வெற்றிக்கொம்பன் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தினர். தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடித்து தரிசனம் செய்தனர்.

சின்னமனூர்:

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், முத்தாலம்மன் கோயில், பிள்ளையார் கோயில், சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் கோயில், குருபகவான் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

கம்பம்:

கம்பத்தில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதேபோல் கம்பராய பெருமாள் கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் சிவன் சன்னதிகளில் மூலவர் விக்கிரகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேலப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர்  காளியம்மன் கோயில் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு வைபவமும் நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரியை சமூக இடைவெளி உடன் எடுத்துச் சென்று குளத்தில் கரைத்தனர். பின்னர் அம்பிகை சிலை, முல்லை பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

போடி:

போடி சுப்பிரமணியர் சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில், பெரியாண்டவர் கோயில், மது கொண்டரங்கி சிவன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில், மேல சொக்கநாதபுரம் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில்,மேற்கு பரமசிவன் மலைக்கோயில், குரங்கணி அருகே உள்ள பிச்சங்கரை மேல சொக்கநாதர், கீழ சொக்கநாதர் கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை முதல் குவிந்தனர்

Related Stories:

>