கொரோனா தடுப்பூசி திருவிழா

திருப்புத்தூர், ஏப்.15: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் நேற்று, சுகாதாரத் துறையின் மூலம், தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்கப்பட்டு, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ளும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில், நெற்குப்பை ஆரம்ப சுகாதார நிலைய, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையில் முகாம் நடந்தது. இதில் பிள்ளையார்பட்டியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் என மொத்தம் 61 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories:

>