×

சிவகங்கை குவாரிக்கு மண் அள்ளிக்கொண்டு அசுர வேகத்தில் செல்லும் லாரிகள்

சிவகங்கை, ஏப்.15:சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராவல் குவாரிகள் உள்ளன. குவாரிகளில் இருந்து கிராவல் மண் அள்ள லாரிகள் இயக்கப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள டிப்பர் லாரிகள் ஆகும். இதனால் கிராவல் லோடு இருந்தாலும், காலி லாரியாக இருந்தாலும் அதிவேகமாக செல்கின்றனர். சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, இளையான்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கியசாலைகள் தற்போது இருவழி மற்றும் நான்கு வழிச்சாலையாக உள்ளன. இதனால் அதிவேகத்திலேயே லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதிக எண்ணிக்கையிலான டிப்பர் லாரிகள் தொடர்ச்சியாக அதிவேகத்தில் செல்லுதல் திடீரென பிரேக் அடித்தல், முன்பு செல்லும் வாகனங்களை முந்துதல், கிராஸ் செய்தல் போன்றவற்றின் போது விபத்து ஏற்படுகிறது.

மேலும் லோடு எண்ணிக்கையில் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதால் அதிவேகத்தில் டிரைவர்கள் லாரியை ஓட்டுகின்றனர். நகரங்களுக்குள் டூவீலர் உள்ளிட்ட அதிக வாகனங்கள் செல்லுமிடம், மக்கள் அதிகம் நடமாடும் இடத்திலும் லாரிகள் வேகத்திலேய செல்வதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அசச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. இவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கூட்டமாக செல்லும் போது கூட லாரியை மெதுவாக ஓடடுவதில்லை. லாரி டிரைவர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் வேகத்தை குறைக்கவில்லை. நகர் பகுதிக்குள் செல்லும்போது குறைவான வேகத்தில் செல்லாமல் அதிவேகத்திலேயே செல்வதால் தொடர்ந்து அச்சத்துடன் நடமாடி வருகிறோம். கிராவல் லாரிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Sivagangai ,
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ