×

மதுரையில் அனைத்து கட்சியினர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

மதுரை, ஏப்.15: டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை அவுட்போஸ்ட்டில் உள்ள அவரது சிலைக்கு, திமுக உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு தலைவர் பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள், பொன்.சேது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக மாநகர் மாவட்டச்செயலாளர் பூமிநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தேமுதிக வடக்கு மாவட்டத்தலைவர் முஜிபூர்ரகுமான் தலைமையில், அவைத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்தனர்.

மதுரை புறநகர் ேபரையூரில் மதுரை மாவட்ட ஆதித்தமிழர்பேரவை தெற்குமாவட்ட செயலாளர் விடுதலைசேகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மேலூரில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலூர் சட்டமன்ற செயலாளர் அய்யாவு நிகழ்ச்சிக்கு தலைமையில் நடைபெற்றது. சோழவந்தானில் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு ரெங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Tags : Madurai ,Dr. ,Ambedkar ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி