×

10 சட்டமன்றத்தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 50 விவிபெட் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு


மதுரை,  ஏப். 15: மதுரை மாவட்ட 10 சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில், 50 விவிபெட்டில் உள்ள ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் விவிபெட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுப்போட்டவுடன் இந்த இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என பதிவாகி, சின்னம், வரிசை எண், வேட்பாளர் பெயர் தெரியும். இது 7 நொடிகள் மட்டும் தெரிந்தன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து, கம்ப்யூட்டர் குலுக்கல் மூலம் 5 விவிபெட்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் உள்ள இந்த ஒப்புகை பதிவுகளையும் (சீட்டுகளை) எண்ண வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வாக்கு எண்ணிக்கையில் கடைசியாக, ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் குலுக்கல் முறையில் 5 விவிபெட் வீதம் 50 விவிபெட்டுகள் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றை அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்,  விவிபெட்டில் பதிவான ஒப்புகைச்  சீட்டுகளை எண்ணுவார். மொத்தம் 30 விவிபெட் இயந்திரங்களில் உள்ள  ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். விவிபெட் இயந்திரத்துக்கும், மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரத்துக்கும் இடையே வாக்குகள் எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால்,  விவிபெட் இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கையே இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த எண்ணிக்கைக்காக தனிப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...