கலெக்டருக்கு கொரோனா பரிசோதனை டிஆர்ஓ.விடம் வக்கீல் மனு

மதுரை, ஏப். 15: மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், நேற்று மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரிக்கு விரைவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், ‘தேர்தல் பணிக்காக மதுரை வந்த போலீஸ் பார்வையாளர் தரம்வீர் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அரசு ஓட்டுநர் மறுத்ததால், கலெக்டர் தனது சொந்த காரில் அழைத்துச்சென்ற செய்தி பத்திரிகைகளில் வெளியானது. அத்துடன் கொரோனா சிறப்பு வார்டில் சில மணி நேரம் மாஸ்க் போடாமலும் இருந்துள்ளார். இதனால் கலெக்டருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கலெக்டரை தனிமைப்படுத்தி உரிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடும்படியும், தனது கடமையில் இருந்து தவறி தேர்தல் பார்வையாளருக்கு கார் ஓட்ட மறுத்த போலீஸ் ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கைவும் எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: