திண்டுக்கல் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு

திண்டுக்கல், ஏப். 15: திண்டுக்கல் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் அருகே பாறைப்பட்டி ஏபி நகரில் உள்ளது செல்லமாரியம்மன் கோயில். இங்கு சாலை விரிவாக்க பணிக்காக இக்கோயிலை இடிக்கப்படுமோ என எண்ணி இப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்நிலையில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக ஏபி நகரை சேர்ந்த ரவி, சுரேஷ், விஜயகுமார், ஜெயராஜ், பெரியசாமி, ஆனந்தகுமார், நடராஜ், பாலமுருகன் ஆகிய 8 பேர் மீது தாலுகா எஸ்ஐ ஜெய்கணேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>