திண்டுக்கல் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

திண்டுக்கல், ஏப். 15: திண்டுக்கல் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானார். செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டியை சேர்ந்தவர் பொம்மக்காள். இவர் சாலை விபத்தில் பலியானவர். இவரது உடல் திண்டுக்கல மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பொம்மக்காளின் உறவினர்கள் மினிலாரியில் திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆரியநல்லூர் பிரிவு அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையி–்ல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் காயமடைந்த 24 பேரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் படுகாயமடைந்த நாகராஜ் (45), அழகர்சாமி (60) ஆகியோர் மேல்சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நாகராஜ் உயிரிழந்தார்.

Related Stories:

>