×

கொங்கராயகுறிச்சி-வைகுண்டம் சாலையில் முட்செடிகள் அகற்றம்

செய்துங்கநல்லூர்,ஏப்.15: வைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியிலிருந்து வைகுண்டம் செல்லும் சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையில் முட்செடிகள் படர்ந்து கிடக்கிறது. தினகரன் செய்தியின் எதிரொலியாக சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்து நிற்கும் முட்செடிகள்  அகற்றப்பட்டன. வல்லநாட்டில் இருந்து கொங்கராயக்குறிச்சி வழியாக வைகுண்டம் செல்லும் சாலையில், தெற்கு தோழப்பன்பண்ணை முதல் அங்குள்ள இசக்கி அம்மன் கோயில் இறக்கம் வரையிலான சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தது. இதனால் பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் மீது முட்செடிகள் உரசி அவர்களை பதம் பார்த்தன. அதோடு பேருந்து ஓட்டுநருக்கு எதிரில் வரும் எந்த வாகனமும் தெரியாமல் இருந்தது. இதனால் விபத்துக்கள் நேரிடும் வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. மேலும் முட்செடியால் குறுகிய சாலை வழியாக வாகனங்கள் விலகி சென்று வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. எனவே இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கொங்கராயகுறிச்சியில் இருந்து வைகுண்டம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் முட்செடிகள் அகற்றப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kongarayakurichi- ,Auvaikundam road ,
× RELATED மாநில நீச்சல் போட்டிக்கு கொங்கராயக்குறிச்சி பள்ளி மாணவர் தேர்வு