×

தமிழ் புத்தாண்டையொட்டி தூத்துக்குடி கோயில்களில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி,ஏப்.15: தமிழ் புத்தாண்டை யொட்டி தூத்துக்குடி சிவன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சித்திரை விசு, பிலவ ஆண்டு பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான சங்கர ராமேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜை நடந்தது. இதில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, பிரதான பட்டர் செல்வம் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதுபோல் தெப்பகுளம் மாரியம்மன் கோயிலில் சித்திரை விசுவை முன்னிட்டு அம்மனுக்கு கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், தூத்துக்குடி பெருமாள் கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், சண்முகபுரம், கீழ சண்முகபுரம், அண்ணாநகர் பத்திரகாளியம்மன் கோயில்கள், மேலூர் சக்திபீடம் உள்ளிட்ட நகரின்  பல்வேறு கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags : Thoothukudi temples ,Tamil New Year ,
× RELATED குரோதி வருட தமிழ் புத்தாண்டில்...