நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

தென்காசி, ஏப்.15: அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசியை அடுத்த நன்னகரத்தில் அவரது சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்தார். தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நன்னகரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்து அம்ேபத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் சுடலை வரவேற்றார். நகர செயலாளர் சாதிர், சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சீனித்துரை, அணி அமைப்பாளர்கள் வேலுச்சாமி, சுப்பையா, குற்றாலம் குட்டி, டாக்டர் மாரிமுத்து, சரவணன், பேரூர் செயலாளர்கள் மந்திரம், மாரியப்பன், ஜெகதீசன், அணி துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, சண்முகநாதன், செல்லத்துரை, சுரேஷ், செல்வம், ஜீவானந்தம், முத்துவேல், திரவியம், சுந்தர், முருகன், நாகராஜ் சரவணார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிமுக சார்பில் மேல

கரம் பேரூர் செயலாளர் வக்கீல் கார்த்திக்குமார் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், அமல்ராஜ், பாண்டியன், பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், மயில்வேலன், நகர செயலாளர் சுடலை, முத்துக்குமாரசாமி, மாரிமுத்து, துப்பாக்கிபாண்டியன், வெள்ளபாண்டி, சாமி, இலஞ்சி மாரியப்பன்  உட்பட பலர்பங்கேற்றனர். பாஜ சார்பில் பரமசிவன், ராஜ்குமார், மகேஸ்வரன், கருப்பசாமி, சங்கரசுப்பிரமணியன், சோடா மாரியப்பன், ஜார்ஜ் பாபு பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் பழனிநாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சட்டநாதன், மாடசாமி ஜோதிடர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சங்கரகுமார், வட்டார தலைவர்  பெருமாள், கராத்தே செல்வன், மாநில பேச்சாளர் எஸ்.ஆர்பால்துரை, தென்காசி நகர தலைவர் ஆனந்தபவன் காதர்மைதீன் பங்கேற்றனர். பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் மாலை அணிவித்தனர். மாநில துணைத்தலைவர்கள் அய்யம்பெருமாள், சேதுஅரிகரன், மாவட்ட செயலாளர் சீத்தாராமன், மாவட்ட தலைவர் குலாம், சுப்பையா, ஆவுடையப்பன்,  சங்கர், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, ஐயப்பன், கார்த்தி, தண்டபாணி பங்கேற்றனர்.

விசிக சார்பில் மாவட்ட செயலாளர் டேனிஅருள்சிங்  தலைமை வகித்து மாலை அணிவித்தார். ஜெயசீலன், பிரபாகர், மணிபாரதி, கார்த்திக், பாலசுப்பிரமணியன், குமார்வளவன், பார்த்தி, தீபன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழர் விடுதலைக் களம் மாநில துணைத்தலைவர் சாமி தலைமையில் மாலை அணிவித்தனர். மாவட்ட தலைவர் குமார், கணேஷ் பாண்டியன், பசுபதிகாளி, தீபன், சபாபதி பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்துபாண்டி மாலை அணிவித்தார். அயூப்கான், கணபதி, வேல்மயில், மாரியப்பன், கண்ணன் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கணேசன் மாலை அணிவித்தார். சங்கரன்கோவில்:  சங்கரன்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் கண்ணன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன், எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் சின்னராஜ் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தண்டபாணி, ஈஸ்வரமூர்த்தி, சுப்பிரமணியன், அசோக்ராஜ் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். சங்கரன்கோவிலில்அம்பேத்கர் சிலைக்கு தெற்கு மாவட்ட  செயலாளர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா மாலை அணிவித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் வெற்றி விஜயன், அன்பழகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜதுரை, சோமசெல்லபாண்டியன், புனிதாஅஜய் மகேஷ்குமார், சங்கை சரவணன், சரவணன், ராயல் கார்த்திக், அப்பாஸ் அலி, யோசப், சுப்புத்தாய், ராமு, விசிக ஜெரால்டு, குமார், ராஜ், மாரிமுத்து, முத்துக்குமார், அழகுதுரை, செந்தில், கொடி கோபாலகிருஷ்ணன், நகர பொருளாளர் லாசர், வார்டு செயலாளர்கள் பங்கேற்றனர்.

 விசிகவினர் தொகுதி பொறுப்பாளர் பீர்மைதீன் தலைமையில் மரியாதை செலுத்தினர். ஆதித்தமிழர் கட்சி தென்காசி மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமையில்  நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மக்கள் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் தம்பிசேவியர் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். செங்கோட்டை:  செங்கோட்டையில்  அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. தலைமை வகித்த தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

நாங்குநேரி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், களக்காட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இறைப்புவாரி ஊராட்சி செயலாளர் சிவலிங்கம், ஏமன்குளம் செயலாளர் யேஷ்வா, பெருமளஞ்சி மணி, களக்காடு வார்டு செயலாளர் லக்கிராஜா, நிர்வாகிகள் ஸ்டாலின் துரைசிங், களக்காடு பாரதி, படலையார்குளம் முருகன், மகளிரணி ஷீலா, பிரதீபா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கடையநல்லூரில் அமமுக மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். நகர செயலாளர் கமாலுதீன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் பெருமையாபாண்டியன், இணை செயலாளர் சுமதிகண்ணன், துணை செயலாளர் கோமதி, சார்பு அணி செயலாளர்கள் ராஜேஷ், நாகலட்சுமி, கோதர்ஷா, ராமசாமி, பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, லியாகத்அலி, நகர செயலாளர்கள் ராமசாமி, மாரியப்பன், ஆய்க்குடி நாகூர்மைதீன், புதூர் முருகன், சாம்பவர்வடகரை காஷா செய்யது ஒலி, விக்னேஷ் பங்கேற்றனர்.

பணகுடி:  பணகுடியில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காமராஜர்  பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு ஞானதிரவியம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, மாவட்டப் பிரதிநிதிகள் அசோக்குமார், மாணிக்கம்  நகரச்செயலாளர் தமிழ்வாணன், மதிமுக வள்ளியூர் ஒன்றியச் செயலாளர்  சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திமுக மீனவரணி மாவட்ட அமைப்பாளர் எரிக்ஜூடு,   மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் அருண், இளைஞரணி அமைப்பாளர் தினகரன்,  துணை அமைப்பாளர் ரஞ்சித்,  ஒன்றியப் பிரதிநிதிகள்  வெற்றிவேல், போஸ்கோ பங்கேற்றனர்.

சிவகிரியில் அம்பேத்கர் சிலைக்கு மனோகரன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் மூர்த்திபாண்டியன், துரைப்பாண்டியன், முன்னாள் மாவட்ட மாணவரணி தலைவர் சசிகுமார், பேரூர் செயலாளர்கள் காசிராஜன், சீமான் மணிகண்டன், சேவகப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கம்பிச்சை,  அவைத்தலைவர் நீராவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மருதுபாண்டியன், ஜெ.பேரவை செயலாளர்கள் வெங்கடேஷ், முருகையா, தலைவர் காளை, செயலாளர் முருகன். பொருளாளர் அம்பேத் பங்கேற்றனர்.

சிவகிரியில் அம்பேத்கர் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில், தென்காசி எம்.பி., தனுஷ்குமார் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வாசு.,ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்.முத்தையாபாண்டியன், மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நல்லசிவன், முத்தையா, விவேகானந்தன், விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், மகளிரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணலீலா, புல்லட் கணேசன் பங்கேற்றனர்.

களக்காடு :  களக்காட்டில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர்கள் ராஜன், செல்வகருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா, ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நகர செயலாளர் சிவசங்கரன் மாலைகள் அணிவித்தனர். காங்கிரஸ் சார்பில் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ரூபி மனோகரன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில்,வடக்கு வட்டார தலைவர் தனபால், நகர கமிட்டி ஜார்ஜ் வில்சன், நகர நிர்வாகிகள் காமராஜ், பாஸ்கர், பெருமாள், முத்துக்குட்டி, செல்வராஜ், ஆறுமுகம், துரை, மூக்கன், வர்க்கீஸ், வில்சன், விபின், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி நாராயணராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>