ராசிபுரம் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

ராசிபுரம், ஏப்.15: ராசிபுரம் நகர திமுக சார்பில் 6வது வார்டில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். அம்பேத்கர் உருவ சிலைக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கந்தசாமி, திமுக நகர இளைஞரணி செயலாளர் கார்த்தி, 6வது வார்டு செயலாளர் தங்கதுரை, சிவராமன், அருண்லால், மோகன், பர்கத்அலி, ரவிச்சந்திரன், நாகேஸ்வரன், சரவணன், சக்திவேல், அவைத்தலைவர் அமிர்தலிங்கம், மணி, ஆசைத்தம்பி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அசோக், ஜெயக்குமார், சாம்ராஜ், யோகராஜன், விநாயகமூர்த்தி, கூட்டணி கட்சிகளின் ஆதித்தமிழர் பேரவை மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>