ராசிபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

ராசிபுரம், ஏப்.15: ராசிபுரத்தில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு  கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, ராசிபுரம் அரசு மருத்துவமனை இணைந்து இம்முகாமினை நடத்தின. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது குறித்து சிறப்பு மருத்துவர் செல்வி கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம், 70 முதல் 80 சதவீதம் நோய் வராமல் தடுக்க முடியும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் வலி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டாம். மது அருந்தும் பழக்கமுடையவர்கள் முதல் நாளும், ஊசி எடுத்துக்கொண்ட அன்றைய தினமும் மது அருந்தக்கூடாது,’ என்றார். முகாமில் கோனேரிப்பட்டி, சிங்களாந்தபுரம், சிராப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Stories:

>