திருச்செங்கோட்டில் சுப்ரீம் மொபைல்ஸ்-ன் புதிய ஷோரூம் துவக்கம்

திருச்செங்கோடு, ஏப்.15: திருச்செங்கோடு முனிசிபல் காம்ப்ளக்சில், சுப்ரீம் மொபைல்சின் 69வது ஷோரூமை, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார். எம்எல்ஏ பொன்சரஸ்வதி, ஹேமா தங்கவேல், பகவதி பழனிசாமி, பிஆர்ஓ பாலமுருகன் குத்துவிளக்கு ஏற்றினர். திருப்பூர் நவீன் பேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் தங்கவேல், திருப்பூர் மிதுன்ராம் டெக்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜூ பழனிசாமி ஆகியோர்,முதல் விற்பனையை துவக்கி வைக்க, பேராசிரியர்கள் செல்வராஜ், சிவமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சுப்ரீம் மொபைல்ஸ் பிராந்திய விற்பனை மேலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கிளை மேலாளர் அருண் ஆகியோர் கூறுகையில், ‘புதிய கிளையில் லேப்டாப், மொபைல் போன்கள் வாங்கும் அனைவருக்கும் 10 கிலோ அரிசி, குக்கர், டேபிள் பேன், டவர் பேன், ஏர்கூலர் உள்ளிட்ட நிச்சயப்பரிசு உண்டு,’ என்றனர். 

Related Stories: