இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம், ஏப்.15:குமாரபாளையம், வட்டமலை குள்ளங்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த இரண்டு வருடங்களாக அப்பகுதியை, சேர்ந்த 12பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்திலிருந்து, உடனடியாக ₹10லட்சம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லங்காட்டு வலசில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணைச்செயலாளர் சந்திரபோஸ், நிர்வாகிகள் கோவிந்தராஜ், பாலசந்திரன், விவசாய சங்க செயலாளர் படைவீடு பெருமாள், ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்குமார், தனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>