திருச்செங்கோடு அருகே போட்டோகிராபர் மர்மச்சாவு

திருச்செங்கோடு, ஏப்.15: திருச்செங்கோடு அருகே, போட்டோகிராபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு எலச்சிப்பாளையம் ஒன்றியம் அவினாசிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (42).இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் 15, 13, 7 வயதுகளில் 3 மகள்களும் உள்ளனர். போட்டோகிராபரான இவர், அப்பகுதி சர்வேயருடன் நிலம் அளக்கும் பணிக்கும் சென்று வந்துள்ளார். நேற்று அதிகாலை சுமார் 5மணிக்கு, சாலையோரம் சென்றுள்ளார். சற்று நேரம் கழித்து, சாலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் இதை கண்டு, அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர்(பொ) கபிலன் ஆய்வு செய்தார். மேலும், மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. சரவணனின் கை, கால்களில் சிராய்ப்புகளும், பின்னந்தலை மற்றும் பிறப்புறுப்பில் காயங்களும் இருந்தன. இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>