×

ஓசூர், சூளகிரி பகுதியில் ஆலங்கட்டி மழை

ஓசூர், ஏப்.15: ஓசூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி நல்ல மண்வளம், சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால், இங்கு அதிக அளவில் காய்கறிகள், ரோஜா மலர், கீரைவகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பசுமை குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாறி கடந்த 3 நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் மதியத்திற்கு மேல் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. மேலும் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.
 இந்நிலையில், நேற்று காலை முதலே வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணியளவில், திடீரென மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள தோட்டத்தின் மீது படர்திருந்த புற்கள் மீது ஐஸ் கட்டி பரவிக் கிடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சூளகிரி: தேன்கனிக்கோட்டை: இதே போல தேன்கனிக்கோட்டை  பகுதியிலும் நேற்று மதியம்  மிதமான மழை பெய்தது.  சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான  சீதோஷ்ணம் நிலவியது. புத்தாண்டு தினத்தன்று மழை பெய்ததால் விவசாயிகள்,  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Hosur ,Choolagiri ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு