வேப்பனஹள்ளியில் 6 பேருக்கு கொரோனா

வேப்பனஹள்ளி, ஏப்.15: வேப்பனஹள்ளி பகுதியில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேப்பனஹள்ளி பகுதியில் குருபரப்பள்ளி, நரணிகுப்பபம், சூலாமலை, சிந்தகும்மனப்பள்ளி, பில்லனகுப்பம், நெடுமருதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சுகாதார பணியாளர்கள் சேர்த்துள்ளனர். வேப்பனஹள்ளி பகுதியில் கொரோனோ பரவல் அதிகரித்து வருவததைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: