×

தர்மபுரி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு

தர்மபுரி,   ஏப்.15: தர்மபுரி மாவட்டத்தில் மா மரங்களில் மா பிஞ்சு, மாங்காய் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரி நிலங்கள் அதிகம் கொண்ட பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் பெங்களூரா ரக மா அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செந்தூரா, அல்போன்சா, பெங்களூரா, நீலம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா வும் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா ரகங்கள் பெரும்பாலும் மாங்கூழ் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு செல்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பருவ நிலைக்கு ஏற்ப, உற்பத்தி திறன் மாறுப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி சாராசரி நிலையை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மா சாகுபடியை பொறுத்த வரையில், ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும். ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில், மா அறுவடை நடக்கும். தற்போது மாவட்டத்தில் மா மரங்களில் மா பிஞ்சுள் அதிகம் பிடித்துள்ளது. சில இடங்களில் மாங்காய் அதிகம் பிடித்துள்ளது. பருவ மாற்றங்கள், முறையான பராமரிப்பு இல்லாத சில மரங்களில் பூக்கள் பூக்க தாமதம் ஏற்படுகிறது. தற்போது மாவட்டத்தில் மாம் பிஞ்சுகள் பிடித்தும், மாங்காய் அதிகம் பிடித்த நிலையில் உள்ளன. நடப்பாண்டு காய்கள் அதிகம் உற்பத்தி பிடித்துள்ளது. மாம்பழம் அதிக விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Dharmapuri District ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...