ராஜராஜ சோழன் திருமடம் தொடக்க விழா

தர்மபுரி, ஏப்.15: தர்மபுரி அருகே, சோகத்தூர் ஊராட்சி சவுளுப்பட்டியில் உள்ள விடையேறிய பெருமாள், மாமன்னர் ராஜராஜ சோழன் செப்புதிருமேனிக்கு, மகா கும்பாபிஷேகம் மற்றும் ராஜராஜசோழன் திருமடம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 6.30 மணிக்கு பேரொளி வழிபாடு, காலை 7 மணியளவில் திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. இதையடுத்து காலை 9 மணிக்கு விடையேறிய பெருமானுக்கும், ராஜராஜ சோழனுக்கும் தமிழ்வழியில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை பவானி சிவனடியார் திருக்கூட்ட தலைவர் சைவ சித்தாந்த பேராசிரியர் தியாகராஜன் நடத்தி வைத்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.

Related Stories: