கொரோனா விழிப்புணர்வு பேரணி

அண்ணாநகர், ஏப்.15: சென்னையில் கொரோனா பரவல் 2வது கட்டமாக அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, அண்ணாநகர் பகுதியில், அனைத்து காவல் நிலையங்களின் சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பரவல் தடுப்பு குறித்து, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி உபயோகித்தல் போன்றவற்றின் பயன்பாடு குறித்து  பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அண்ணாநகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆணையர் ஜவஹர் பங்கேற்றார். பின்னர், போலீசார் அணிவகுப்பில் பங்கேற்று, ஒவ்வொரு சாலை மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று, அப்பகுதி மக்களிடம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், உதவி ஆணையர் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>