வாசுதேவநல்லூர் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

தென்காசி, ஏப். 14: வாசுதேவநல்லூர் அருகே வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். வாசுதேவநல்லூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆனந்த் (28). இவர் மனைவியை மாங்குடியில் கோயில் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஆனந்த் மட்டும் ஊருக்குத் திரும்பினார். தென்காசி-மதுரை ரோட்டில் பைக்கில் வந்தபோது அவ்வழியே வந்த வாகனம் பைக் மீது மோதியதில் படுகாயமடைந்த ஆனந்த் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>