×

நாங்குநேரி பகுதியில் 9 பேருக்கு கொரோனா

நாங்குநேரி, ஏப்.14:  நாடெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை யொட்டி  நாங்குநேரி பகுதியிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் எடுத்த சோதனையின் அடிப்படையில் மூலைக்கரைப்பட்டி காந்திநகர், ஏமன்குளம், நாங்குநேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரிசோதனை நடந்து வருகிறது. இதில் எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முககவசம் இன்றி வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும். வெளியே செல்பவர்கள் கிருமிநாசினி, சோப்பு பயன்படுத்தி கை,கால்களை நன்றாக கழுவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோருக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் வீட்டில் மற்றவர்களுக்கு அது வேகமாக பரவ வாய்ப்புள்ளது. பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Nanguneri ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...