×

கோவில்பட்டியில் முகக்கவசம் அணியாத 88 பேருக்கு அபராதம்

கோவில்பட்டி, ஏப். 14: கோவில்பட்டியில் முகக்கவசம் அணியாத 88 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்ட 3 சிறப்பு குழுவினர் நேற்று நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் மெயின் ரோடு, நெல்லை ரோடு, புது ரோடு பகுதிகளிலும், மண்டல துணை தாசில்தார் அறிவழகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்  தலைமையிலான குழுவினர் எட்டையாபுரம் ரோடு, பசுவந்தனை  ரோடு, மந்தித்தோப்பு ரோடு பகுதிகளிலும், எஸ்ஐ  வில்சன் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர் பேருந்து நிலைய பகுதி, மார்க்கெட் ரோடு பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் இருந்த 88 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.17600, சமூக இடைவெளி கடைபிடிக்காத இரு நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை