சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் ஆசிரியர் சாவு

சாத்தான்குளம், ஏப். 14: சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த வட்டார வளமைய சிறப்பு ஆசிரியர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.  சாத்தான்குளம் வடக்குத்தெரு கோபால் நாடார் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் சமுத்திரபாண்டி (52). இவரது மனைவி கங்காதேவி. தம்பதிக்கு கதிர்காமுவேல், கதிர்காமுதுரை என இரு மகன்கள். கொம்மடிக்கோட்டை வட்டார வளமையத்தில் சிறப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த சமுத்திரபாண்டி, கடந்த 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் பணி முடித்து இரவில் தனது பைக்கில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 1.45 மணி அளவில் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை  அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வந்தபோது எதிரே மாடு குறுக்காகச் சென்றது. இதனால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழேவிழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.40 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவர் மனைவி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் எஸ்.ஐ. முத்துமாரி வழக்குப் பதிந்தார். இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் விசாரித்து வருகிறார். ஆசிரியர் மறைவுக்கு ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், ஊர் மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>