தூத்துக்குடியில் ஒரேநாளில் குண்டாசில் இருவர் கைது

தூத்துக்குடி, ஏப். 14: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை கிழக்குத் தெருவைச் சேர்ந்த காளிபாண்டி மகன் பாலமுருகன் (22), கடந்த மார்ச் 3ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக  தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கருத்தப்பாண்டி (40), நெல்லை  மாவட்டம் வி.கே புரம், சக்திநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரபாண்டியன் (22) மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரை கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். இதில்  கருத்தபாண்டி  ஏற்கனவே கடந்த 1ம்தேதி  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வைகுண்டம் தெப்பகுளத் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் பேச்சிமுத்து (35) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சங்கரபாண்டியன், பேச்சிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சிறையில் அடைக்குமாறு எஸ்பி  ஜெயக்குமார் பரிந்துரைத்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன் பேரில், அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், சபாபதி ஆகியோர் பாளை மத்திய சிறையில் வழங்கினர்.

Related Stories:

More