×

செய்துங்கநல்லூர் சந்தை வளாகத்தில் வேளாண் தகவல் மையம் துவக்கம்

செய்துங்கநல்லூர், ஏப். 14: செய்துங்கநல்லூர் சந்தை வளாகத்தில் வேளாண் தகவல் மையம் துவங்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவுக்கு கருங்குளம் வட்டார விவசாய சங்கத்தலைவர் பிள்ளைமுத்து தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் ஊராட்சி தலைவர் பார்வதிநாதன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் நங்கமுத்து வரவேற்றார். இதில் தமிழ்நிலம் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் நாராயணசாமி, மாவட்ட விவசாய சங்கச் செயலாளர் ஜோதிமணி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் மகேந்திர பிரபு, தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கோவில்பட்டி மேரி ஷீலா உள்ளிட்டோர் மையத்தை துவக்கிவைத்து வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில் விவசாயிகள் சந்தேகங்களுக்கு தகவல் தெரிவிக்கும் 6374144557 என்ற புதிய அலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்க வேண்டும். உர விலையை குறைக்க வேண்டும். தெய்வச்செயல்புரத்தில் பயிறு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நிலுவையிலுள்ள காப்பீடு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பிற்கான நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கோவில்பட்டி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் குமார், பொருளாளர் ராமச்சந்திரன் எட்டயபுரம் சரவணமுத்து வேல், செய்துங்கநல்லூர் திருவரங்கம், சுகாதார பயிற்சியாளர்கள் கல்யாணி, ஈஸ்வரி, விற்பனைத் துறை அலுவலர் மணிகண்டன், ராசாங்குளம் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் முருகன், அகரம் இசக்கி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருங்குளம் வட்டார விவசாயிகள் சங்க பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை பாளை செந்தமிழ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Cheytunkanallur Market Complex ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு