சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் வீதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்ற களமிறங்கிய பொதுமக்கள்

சாத்தான்குளம், ஏப். 14: சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் வீதிகளில் தேங்கிய குப்பைகளை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் களமிறங்கி அகற்றி தூய்மைப்படுத்தினர்.சாத்தான்குளம்  பேருராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட தச்சமொழியில் நாடார் தெற்குத்  தெருவில் முறையாக அமைக்கப்படாத சாலையால் அப்பகுதி முகப்பில் ராட்சத பள்ளம் உருவானது. இதனால் சிறு மழை பெய்தால் கூட பெருக்கெடுக்கும் தண்ணீர் இங்கு அடிக்கடி தேங்கிநிற்கிறது. அத்துடன் அப்பகுதியில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் வீதிகளில் மலைபோல் சேரும் குப்பைகளால் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து பேருராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி அந்தோனிகுமார் தலைமையில்  வாலிபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தேங்கிய குப்பைகளை அகற்றி பிளிச்சீங் பவுடர் தெளித்து தூய்மைப் பணியில் களமிறங்கினர். மேலும் அப்பகுதியில் தேங்கிநிற்கும் மழை நீரையும் வடியச்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் இனியாவது  பேருராட்சி நிர்வாகம் இதுபோன்ற தூய்மைப் பணிகளில் கவனம் ெசலுத்துவதோடு இங்கு  நிரந்தரமாக தேங்கும் மழைநீரை வடிய செய்யவும், குப்பைகளை அவ்வப்போது உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories:

More
>