×

கோவில்பட்டியில் கோடை மழை

கோவில்பட்டி, ஏப். 14: கோவில்பட்டியில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் கொளுத்தியது. பல நாட்கள் வெப்பம் 100 டிகிரியை கடந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக காலையில் வெயில் கொளுத்துவதும், பிற்பகலில் வெப்பம் குறைவதும் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.அதன்படி நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை