×

சித்திரை மாத பிறப்பையொட்டி பூ, பழம் விற்பனை அதிகரிப்பு

திருப்பூர், ஏப் 14: திருப்பூரில் சித்திரை மாதம் பிறப்பதையொட்டி நேற்று பழங்கள் மற்றும் பூக்களை விற்பனை அதிகரித்தது. தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரை முதல் நாள் இன்று துவங்குகிறது. முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் இதர பழங்கள், பூ, நாணயங்கள், தங்கம், வெள்ளி நகைகள், கண்ணாடி, கொன்றை மலர்களைவைத்து, சித்திரை துவங்கும் நாளில், இப்பொருட்களில் விழிப்பது வழக்கமாக பின்பற்றப்படுகிறது. பிறக்கும்புத்தாண்டில் இனியதாக இருக்கவும், பொன் பொருள் சேரவும், இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. வழக்கமாக, சித்திரை பிறக்கும் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே கடைவீதிகளிலும், சந்தைகளிலும், பழங்களின் விற்பனைகளைகட்டியிருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா மீண்டும் அதிகளவில் பரவி வரும் சூழலில் ஒரு வாரம்முன்பாக நடைபெறும் பழங்கள் விற்பனை களையிழந்து காணப்பட்டது. ஆனாலும் நேற்று திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் பழக்கடைகள், மற்றும் தள்ளுவண்டிகளில் வைத்து பழங்களை விற்பனை செய்தனர்.  இந்தபழங்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்; திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சித்திரை மாதம் பிறப்பதையொட்டி பல்வேறு வீடுகளில் பூஜைகள் செய்வது வழக்கம். இதனால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் மலர்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சித்திரை மாதம் பிறப்பதையொட்டி பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

Tags : Chithirai ,
× RELATED மதுரை சித்திரை பெருவிழா - வைகையில் கள்ளழகர் | Madurai Chithirai Festival 2024.