×

சிவன்மலை கோவிலுக்குள் தேங்காய், பூ, பழம் கொண்டு செல்ல அனுமதி இல்லை

காங்கயம், ஏப். 14: கொரோனா பரவல் காரணமாக சிவன்மலை கோவிலுக்கு பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை பூஜைக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கி வருகிறது. இதனை தடுக்கவும், பொதுமக்களை தற்காத்துக்கொள்ள அரசு பல தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதையடுத்து சிவன்மலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜைக்காக தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிவன்மலை கோவில் உதவி ஆணையர் ஜெ.முல்லை கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.  பக்தர்கள் தேங்காய், பூ, பழம் கொண்டு வர அனுமதியில்லை. வரிசையில் இடைவெளியிட்டு பக்தர்கள் செல்ல வேண்டும். நுழைவு வாயிலில் கிருமி நாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்த பின்புதான் கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படும். கோவில்களில் உள்ள சாமி சிலைகளை யாரும் தொடக்கூடாது. கோவில் வெளிப்புறம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசு தெரிவித்துள்ள கட்டுபாடுகள் நடைமுறைப்படுத்தப்படும், என்றார்.

Tags : Sivanmalai temple ,
× RELATED சிவன்மலை கோயிலில் இன்று தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம்