சக்தி முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

கூடலூர், ஏப்.14: கூடலூர் ஸ்ரீ சக்தி முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம், 61ம் ஆண்டு வருடாந்திர பிரதிஷ்டா விழா சிறப்பாக நடைபெற்றது. கூடலூர் மைசூர் சாலை செவிடிப் பேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேக விழா மற்றும் 61ம் வருடாந்திர பிரதிஷ்டா விழா கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடந்து வந்த விழாவில் நேற்று சுதர்சன ஹோமம், அம்மன் பிரதிஷ்டை, கலசாபிஷேகம் மற்றும் கோபுர கலசம், மூலவர் தெய்வங்களுக்கு கலச அபிஷேகமும் நடந்தது. பிரம்மஸ்ரீ வாசுதேவன் நம்பூதிரிபாடு தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவில்  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மிக குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.

Related Stories: