×

சிவகாசி பகுதியில் கொரோனா ஊசிக்கு தட்டுப்பாடு பொதுமக்கள் அலைக்கழிப்பு

சிவகாசி, ஏப். 14: சிவகாசி நகராட்சி பகுதியில் கொரோனா ஊசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஊசி போட முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. கொரோனா ெதாற்றால் பலர் பாதிப்பிற்குள்ளாகியும், பலியாகியும் வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனினும் கொரோனா பரவல் குறையவில்லை. அடுத்து வரும் மாதங்களில் கொரோனா பரவல் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப். 11 முதல் தடுப்பூசி திருவிழா நடத்திட மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டிருந்தது.

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 41 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பல மையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. இதனால் தடுப்பூசி போட வரும் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். சிவகாசி நகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் ேநற்று தடுப்பூசி போட ஏராளமான பொதுமக்கள்  வந்திருந்தனர். ஆனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஊசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோல் அரசு மருத்துவமனையில் மதியம் 12 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் நாளில் எந்த நேரமும் ஊசி போட்டு கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சிவகாசி சுகாதார மாவட்டத்தில் பல மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் ஊசி போடும் பணி சரிவர நடைபெறவில்லை. என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சிவகாசியை சேர்ந்த பாஜ பிரமுகர் ஆறுமுகச்சாமி என்பவர் கூறுகையில், ‘நான் கடந்த 28 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்டேன். சிவகாசி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ேநற்று 2வது டோஸ் தடுப்பூசி போட ெசன்றேன். மருத்துவ பணியாளர்கள் ஊசி இல்லை என கூறி அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு கொள்ள கூறினர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு  ெசன்ற போது மதியம் 12 மணிவரை மட்டுமே தடுப்பூசி போடப்படும் எனக்கூறி திருப்பி அனுப்பி  விட்டனர். தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்’ என்றார்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு