தளவாய்புரத்தில் பங்குனி பொங்கல் விழா

ராஜபாளையம், ஏப். 14: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் முதலியார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2 நாட்களாக நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், தீச்சட்டி எடுத்தும் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு  கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் கும்மியடித்து வழிபாடு செய்தனர்.

Related Stories:

>