×

வெண்ணியார் அணையில் மூழ்கி இறந்த மருத்துவ பிரதிநிதி உடல் 4 நாளுக்கு பிறகு மீட்பு


சின்னமனூர், ஏப்.14: தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மதன்குமார்(29). மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி மதுரையை சேர்ந்த நண்பர்களுடன் ஹைவேவிசுக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள வெண்ணியார் அணையில் குளித்தபோது மதன்குமார் 100 அடி ஆழ தண்ணீரில் சிக்கி மாயமாகிவிட்டார். ஹைவேவிஸ் போலீசார் மற்றும் உத்தமபாளையம் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக ஹைவேவிஸ், தூவானம், மணலாறு அணைகளில் குழாய்கள் மூலம் பம்பிங் செய்வது  நிறுத்தப்பட்டது. மேலும் வெண்ணியார் அணையில் தேங்கி நிற்கும் தண்ணீரையும்  இரவங்கலார் அணைக்கு அனுப்பினர். இதன் பிறகு 4வது நாளான நேற்று ஆழமான குழியில் சிக்கி கிடந்த அவரது உடல்   மீட்கப்பட்டது. இது குறித்து மதன்குமார் மனைவி ஐஸ்வர்யா கொடுத்த புகாரின்பேரில் ஹைவேவிஸ் சார்பு ஆய்வாளர் பொன்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Tags : Venniyar dam ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...