ரமலான் நோன்பு அனுசரிப்பு 30 நாள் மாலை நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலரிடம் தமுமுக மனு

முத்துப்பேட்டை, ஏப்.14: முத்துப்பேட்டை தமுமுக நகர தலைவர் அலீம், துணைத்தலைவர் மன்சூர், மமக நகர செயலாளர் சீமான், துணை செயலாளர் நிஜாம் உட்பட நிர்வாகிகள் முத்துப்பேட்டை பேரூராட்சி 2ம் நிலை அலுவலர் மதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: இன்று (14ம் தேதி) முதல் ரமலான் நோன்பு 30 நாட்களுக்கு அனுசரிக்கப்பட உள்ளது.

அதுசமயம் வழக்கமாக காலை நேரங்களில் விநியோகிக்கும் குடிநீர் திறப்பை மாலை நேரங்களில் 3.30 முதல் 4.30 மணிக்குள்ளாக திறந்து வழங்க வேண்டும். முத்துப்பேட்டை பகுதியில் தடையின்றி சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். சஹர் நேரம் அதிகாலை 3 மணிக்கு இப்தார் நேரங்களில் பேரூராட்சியில் உள்ள சங்கு சத்தம் எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி 2ம் நிலை அலுவலர் மதன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

More