×

டிராவல்ஸ் அதிபரை தாக்கி நகை, பணம் பறிப்பு 3 பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு

தேனி, ஏப்.14: கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபரை தாக்கி பணம், நகை, பைக் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக 4 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே அரண்மனைப்புதூரில் குடியிருப்பவர் பாலசுப்பிரமணியன் மகன் பரத்பாண்டியன்(32). தேனி அருகே அன்னஞ்சி என்ஜிஓ காலனியில் குடியிருப்பவர்கள் மணி, கவுசல்யா, அமராவதி, உஷா. தேனி நகர் பங்களாமேட்டில் பரத்பாண்டியன் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.  இதில் பரத்பாண்டியனுக்கும், மணிக்கும் இடையே கடந்த 2 வருடங்களாக கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.  இதில் பரத்பாண்டியன் வாங்கிய பணம் முழுவதையும் கொடுத்துவிட்டதாக கூறியநிலையில், மணி மற்றும் அவரது தரப்பினர் பரத்பாண்டியன் இன்னமும் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மணி, கவுசல்யா, அமராவதி, உஷா ஆகியோர் பரத்பாண்டியனின் டிராவல்ஸ்சுக்கு சென்று தங்களுக்கு தரவேண்டிய பணத்திற்காக அவரை தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவர் அணிந்திருந்த 3.5 பவுன் செயின், ரொக்கப்பணம் ரூ.22 ஆயிரம் மற்றும் டிராவல்ஸ் முன்பாக நிறுத்தி வைத்திருந்த புல்லட் ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டனராம். இதுகுறித்து பரத்பாண்டியன் அளித்த புகாரின்பேரில் தனி போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு