×

பட்டுக்கோட்டையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 106 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பட்டுக்கோட்டை, ஏப். 14: பட்டுக்கோட்டையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள சி.ஆர்.சி. பனிமனை ஓட்டுநர் பயிற்சி வளாகத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் தங்கராசு முன்னிலையில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 106 ேபருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அரசு மருத்துவர் சாமிபாலாஜி தலைமையில் குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

Tags : Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்...