தஞ்சையில் அரசு பேருந்துகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை

தஞ்சை. ஏப்.14: தஞ்சையில் அரசு பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்தில் பயணம் செய்யும் பயனிகளுக்கு சானிடைசர் வழங்கி, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பேருந்தில் பயணிகள் நின்று செல்லாத அளவிற்கு கூடுதலாக ஒருநடை பேருந்துகள் செங்கிப்பட்டி வரை இயக்கப்பட்டு வருகிறது. இதனை பேருந்து நிலையத்தில் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு நடை மேடையிலும் அலுவலக பணியாளர்களை நியமித்து இதனை கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் மகேஸ்வரன், பேருந்து நிலைய பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கிருமி நாசினி தெளித்து, மேலும் பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றாமல், சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>