×

பாலமேடு பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்


அலங்காநல்லூர் ஏப். 14: பாலமேடு பேரூராட்சியில் உள்ள ராம்நகர், கோணப்பட்டி பகுதிகளில் ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதனால், பேரூராட்சி 15வது வார்டில், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி தலைமையில், தீவிர நோய் தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் வாறுகால்கள், சுகாதார வளாகங்கள், தெருக்கள், வீடுகளில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் சந்தைகளில் சமூக இடைவெளிக்காக கோடுகள் வரையப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மருந்துகள், கையுறை வழங்கி கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற எச்சரித்து வருகின்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, அலுவலக மேலாளர் அங்கையற்கண்ணி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Palamedu ,
× RELATED ₹14 லட்சத்திற்கு பருத்தி விற்பனை