×

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது

ராசிபுரம், ஏப்.14: ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சிவன் கோயிலுக்கு சொந்தமான குளத்ைத பொதுமக்கள், தன்னார்வலர்கள் தூர்வாரி வருகின்றனர். இப்பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடையே கூறியதாவது: பழமை வாய்ந்த சிவன் கோயில் குளத்ைதை சிவ பக்தர்களும், இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் சேர்ந்து தூர்வாரும் பணி நடந்து வருவது வரவேற்கத்தக்கது. இந்த பகுதியில் 90 சதவீத மக்கள் முக கவசம் அணிந்து உள்ளார்கள். சிலர் முக கவசம் அணிந்து வாய் மற்றும் மூக்கு பகுதிக்கு அணியாமல் அலட்சியமாக செல்கிறார்கள். பேருந்துகளில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கூடுதல் பயணிகளை ஏற்றி சென்றால் ₹200 அபராதம் விதிக்கப்படும். மேலும் வணிக சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்  தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...