×

நாமக்கல் பகுதியில் 3நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல், ஏப்.14: நாமக்கல் பகுதியில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை விபரம்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று(14ம் தேதி) 1 மில்லி மீட்டர், 15ம் தேதி, 16ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் 15 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 8 முதல் 15 கி.மீ., வேகத்தில் தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலை குறைந்தபட்சம் 73.4 டிகிரியாகவும், அதிகபட்சம் 96. 8 டிகிரியாகவும் இருக்கும்.

கோடை காலங்களில் கறவை மாடுகள் அதிக வெப்பநிலை காரணமாக அயர்ச்சி அடைகிறது. எனவே, வெயில் நேரங்களில் கறவை மாடுகளை மேய விடக்கூடாது. குளிர்ந்த நேரங்களில் கறவை மாடுகளுக்கு போதுமான அளவு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். நாமக்கல் மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகி உள்ளதால் பூச்சி, ஈக்களின் இனபெருக்கத்திற்கு உகந்ததாக இருக்கும். எனவே, கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும். பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பிலை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Namakkal ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...