×

நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு

நாமகிரிப்பேட்டை, ஏப்.14: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி அருகேயுள்ள வாணிகிணறு பகுதியில் அசோகன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், ஆண் சடலம் மிதப்பதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து தீயணைப்புதுறையினர் உதவியுடன், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் பச்சுடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுநாத்(35) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. அவர், அந்த வழியாக சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டையில் 20 லட்சம்...