×

ராசிபுரம் நகராட்சியில் சம்பளம் வழங்காததால் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த முடிவு


ராசிபுரம், ஏப்.14: ராசிபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் என 175 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை தவிர அலுவலக பணியாளர்கள் 80 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் மாதா மாதம் வங்கிக் கணக்கில் 5ம் தேதிக்குள் சம்பளம் செலுத்தபட்டது. ஆனால் சில மாதமாக 10 மற்றும் 15ம் தேதி என நாள் கடத்தி வந்தனர். இந்நிலையில் நகராட்சி பகுதியில் மார்ச் மாத வசூலாக சுமார் 80 சதவீதம் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். களத்தில் துப்புரவு பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு இடையே பணியாற்றி வந்தாலும் முறையாக சம்பளம் அந்தந்த தேதியில் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த மார்ச் மாத சம்பளத்தை ஏப்ரல் மாதம் 13ம் தேதி கடந்தும் இன்றளவும் சம்பளம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். தமிழ் வருட பிறப்பு கொண்டாடும் சூழ்நிலையில் யாருக்கும் சம்பளம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பள தொகையை வழங்க வேண்டும். இல்லை என்றால் நாளை துப்புரவு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Tags : Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்