வேப்பனஹள்ளி வழியாக கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்

வேப்பனஹள்ளி, ஏப்.14: தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை வேப்பனஹள்ளி வழியாக கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு தாராளமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் பயனடைய தமிழக அரசு ரேஷன் கடைகளில் கார்டு ஒன்றுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு ₹5 வீதம் விலை கொடுத்து வாங்கி அவற்றை கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

கெலமங்கலம், ராயக்கோட்டை, சூளகிரி, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கும் வியாபாரிகள் அவற்றை சொகுசு கார்கள் மற்றும் டூவீலர்களில் ராமச்சந்திரம், கோனேகவுண்டனூர் வழியாக ஆந்திராவிற்கும், நாச்சிகுப்பம், பெரியமணவாரனப்பள்ளி, மற்றும் நேரலகிரி வழியாக கர்நாடகாவிற்கும் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். வேப்பனஹள்ளி அருகே அத்திகுண்டா மற்றும் நேரலகிரியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கடத்தல்கார்களை கண்காணிக்க முடியாததால் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ரோந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டால் அரிசி கடத்தலை தடுக்க முடியும்.

எனவே, தீவிர கண்காணிப்பும் மேற்கொண்டால் அரிசி கடத்தலை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>