அகரம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளி, ஏப்.14: காவேரிப்பட்டணம் ஒன்றியம், அகரம் கிராமத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி மற்றும் கபசுர குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது. நாகரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் பெரியசாமி, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரிப்பட்டணம் மருத்துவ அலுவலர் தாமரைசெல்வி கபசுர குடிநீரை வழங்கினார். எஸ்ஐ பச்சமுத்து முக கவசம் வழங்கினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் மாணவர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு குறித்து விளக்கினர்.

Related Stories:

>