×

ரேஷன் பணியாளர் சங்கம் சார்பில் நிலுவை ஊதியத்தை உடனே வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

நாகை,ஏப்.14: நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். நியாயவிலை கடைகளுக்கு புழுங்கல் அரிசி 3 ரகமாக வழங்காமல் ஒரே ரகமாக வழங்க வேண்டும். திருக்குவளை வட்டம், வடக்கு பனையூர் மற்றும் திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

கொரோனா கால பலன்கள் அனைத்தையும் சீர் செய்து வழங்க வேண்டும். அரசு சேவை திட்டம் அறிவிக்கும்போது கார்டு ஒன்றுக்கு 50 பைசா வீதம் வழங்க வேண்டும். அதன்படி கொரோனா கால சேவை திட்டம் ஜூன் மாதம் 2020 முதல் ஜனவரி மாதம் 2021 வரை வழங்க வேண்டும். சிக்கல், நரிமணம், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Ration Employees Union ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு